2026 ஆம் ஆண்டு கடன் என்ற குண்டு வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த இந்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 2026இல் கடன் என்ற குண்டு வெடிக்கும்.
“இந்த விவாதம் முழுமையடையாது. விவாதத்திற்கு தேவையான முழுமையான ஆவணங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்காமல் விவாதம் இடம்பெறுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றது ரூபா இல்லாமல் அல்ல டொலர் இல்லாமலேயே என்பதை உணர வேண்டும். இந்த ஒப்பந்தங்களில் இருப்பது ரூபாவிற்கான தீர்வுதான். டொலருக்கான தீர்வு இதில் இல்லை.
வருடத்திற்கு 22 பில்லியன் டொலர் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. கடனை செலுத்த 7 பில்லியன் டொலர் தேவைப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தில் கடன் அதிகரிப்பதைத் தவிர டொலர் நெருக்கடிக்கு தீர்வு இல்லை” என்றார்.
