கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட உள்ளதாக தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மே மாதம் ஆளுநர்களை மாற்றம் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், மத்திய மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்கவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
