உடைக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் மேற்குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அத்துடன், பொலிஸார் எடுத்துச்சென்றுள்ள விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
