யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் முகப்புத்தகம் (Face book) வைத்திருப்பதால் அவருடைய திருமணம் குழம்பிப்போன உண்மைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமண தரகர் மூலம் பெண் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
அவ்வகையில் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த மணமகன் வீட்டாரும் பெண்ணை பார்த்து பிடித்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
சம்மந்தக்கலப்பும் முடிந்து, திருமணத்திற்கான திகதியும் எடுக்கப்பட்ட நிலையில், மணமகளின் பெயரில் முகப்புத்தகம் இருப்பது மணமகனுக்கு தெரியவர, இவ்விடயம் குறித்து மணமகன், மணமகளிடம் கேட்டிருந்தார். மணமகளும் முகப்புத்தகம் பொழுது போக்கிற்காக வைத்துள்ளேன் எனப்பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் மணகமன் தன் பெற்றோரிடம் குறித்த திருமணம் தனக்கு வேண்டாமெனத் தெரிவித்துள்ளார். என்ன காரணமென பெற்றோர் வினவியபோது ” பொம்பிளை பேஸ்வுக் வைச்சிருக்காவாம் – உது சரிப்பட்டுவராது” என்று சொல்லி திருமணத்தை நிறுத்தக்கோரியுள்ளார்.
இந்நிலையில் குறித்த திருமணம் நின்று போயுள்ளது. திருமணம் செய்யும் நிலைக்கு வந்தும் பேஸ்புக்கால் குறித்த திருமணம் குழம்பிபோய்யுள்ளது.
