நாட்டில் கொரோனாத் தொற்று தீவிரமடைந்து வருவதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.
யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆண் ஒருவர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
