வடமாகாண உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் யாழ்.மாவட்ட அணி சம்பியன் பட்டத்தை தனதாக்கி தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டி இன்று (30) யாழ்ப்பாணம் அரியாலை உதைபந்தாட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த கிளிநொச்சி மாவட்ட அணி அசுர பலம் கொண்ட யாழ்.மாவட்ட அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் அனல் பறந்த ஆட்டத்தை மைதானத்தில் வெளிப்படுத்தின.
இப்போட்டியின் இறுதியில் 4 : 2 என்ற கோல்கணக்கில் வெற்றி கிளிநொச்சி மாவட்ட அணியை வெற்றி கொண்டு யாழ்.மாவட்ட அணி வடமாகாண சம்பியனானது.
இப்போட்டியில் யாழ்.மாவட்ட அணி சார்பாக ஆரம்பம் முதல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய எடிசன் இரண்டு கோல்களையும், ஞானரூபன், ஆர்த்திகன் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றனர்.
கிளிநொச்சி மாவட்ட அணி சார்பில் எட்வின், தனுஜன் தலா ஒவ்வொரு கோல்களை தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
யாழ்.மாவட்டத்தின் நட்சத்திர வீரரும், சர்வதேசம் அடங்கலாக பல களங்கள் கண்ட அனுபவ வீரர் தர்மகுலநாதன் கஜகோபனின் அட்டகாசமான தலைமைத்துவத்தில் எடிசன், ஞானரூபன், நிதர்சன், கீதன்,
ஜூட்சுமன்,ஜெயராஜ், அமல்ராஜ், சாந்தன் அகீபன், பிரசாத், டிலக்சன், தில்லைக்காந்தன், ஆர்த்திகன், சுஜாஸ்கான், சஜீபன், விக்னேஸ், ஜெரோம், (நீ) ஜெரோம்(ஞா), நிசாந்தன் ,ஹெந்துசன் என்ற நட்சத்திரப்பட்டாளத்தோடு களம் கண்ட யாழ்.மாவட்ட அணி வெற்றிவாகை சூடியது.
யாழ்.மாவட்ட அணிக்கு பயிற்றுனராக ப.முகுந்தன் அவர்களும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிப்பெற்ற யாழ்.மாவட்ட அணிக்கு வாழ்த்துக்களையும், இறுதிவரை சளைக்காது போராடி மீண்டும் சாதிப்போம் என்ற முயற்சியோடு அதிரடி ஆட்டம் காட்டிய கிளிநொச்சி மாவட்ட அணிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் தமிழ் ஒளி குழுமம் மகிழ்வடைகின்றது.
