இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்
எரிபொருட்களின் விலைள் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு 333 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 365 ரூபாவாகவும், டீசல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 310 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு 330 ரூபாவாகவும் புதிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
