சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (01) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2261 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், உழைக்கும் வயதில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
