கிளிநொச்சி வட்டக்கச்சி – மாயவனூர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் வட்டக்கச்சி மாவடிப்பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பாலசிங்கம் கிருஸ்னேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
