வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வல்லை முனியப்பர் ஆலயத்தில் உள்ள பழக்கடை ஒன்றில் இருந்தே தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய வசந்தகுமார் ஸ்ரீகாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
