ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.ஊடக அமையத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்.ஊடக அமையத்திற்கு முன்பாக இன்று (03) இடம்பெற்றது.
தமிழ் ஊடகப் படுகொலையை மூடி மறைக்காதே, ஊடக சுதந்திரம் எங்களின் சுதந்திரம், ஊடகங்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் அடக்காதே, ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
