தென்மராட்சி வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் தென்மராட்சி ரீதியிலான TBBL பிறிமீயர் லீக் போட்டிகள் பிரமாண்டமாக ஆரம்பமாக உள்ளது.
தென்மராட்சி வீரர்களுக்கு சாதிக்க களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் மட்டுவில் தெற்கு இளைஞர்களால் குறித்தப்போட்டி நடத்தப்பட உள்ளது.
குறித்த தொடரில் 10 அணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. போட்டிகள் அனைத்தும் மட்டுவில் வளர்மதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்.
குறித்தப் போட்டிக்கு பெறுமதி மிக்க பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சம்பியன் அணிக்கு ஐந்து லட்சம் ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும், இரண்டாவது அணிக்கு 2 லட்சத்து 50000 ஆயிரம் பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட உள்ளது.
விளையாட்டுப் பிரியர்களே எதிர்வரும் 21 ஆம்திகதி முதல் தென்மராட்சி வீரர்களின் அசுர ஆட்டங்களை கண்டுகளிக்கத் தயாராகுங்கள்.
