மட்டக்களப்பு கிரான் – வாகனேரிப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 24 வயதுடைய
க.ஜெயந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். வழக்கம் போல் மாடு கட்டும் தொழிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வீட்டில் அருகாமையில் நின்ற யானையே இவரை தாக்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே குறித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
