தையிட்டிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களால் போராட்டம் ஒன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் போராட்டகாரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த போராட்டத்தில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அங்கயன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இடம்பெறுகின்ற நிலையில், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தையிட்டிப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
