யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தையிட்டிப் பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அங்கயன் இராமநாதன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு உள்ளே இருந்து வெளியேயும், வெளியே இருந்து உள்ளேயும் யாரும் செல்ல முடியாதவாறு தடைவித்திக்கப் பட்டிருப்பதாகவும் அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
