“தையிட்டியில் கட்டப்பட்டு முடியும் கட்டத்தில் உள்ள விகாரையை நேரடியாக பார்வையிட்டேன். நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத நிகழ்வுகளை தான் இந்த அரசு மேற்கொண்டு கொண்டிருக்கின்றது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
தையிட்டிப்பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டு நிலவரங்களை பார்த்த பின்பு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
” நான் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பொழுது கூறினார்கள் ஆயிரம் விகாரை கட்டப்போகின்றார்கள் என்று ஆனால், அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் இவ்வாறான விகாரைகள் திட்டமிட்டு முளைத்துகொண்டு வருகின்றன.
இது சம்பந்தமாக ரணில் பேசப்போகின்றேன், கூப்பிட்டு கதைக்கதான் போகின்றேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார்
ஆனால், எதைப்பற்றி பேசப்போகின்றார் தமிழ் மக்களது பிரச்சினை சம்பந்தமாக பேசப்போகின்றேன் என்று சொன்னவர் தமிழ் மக்களுடைய தீர்க்கப்படகூடிய பிரச்சினைகள் அதிகாரபங்கீடு சம்பந்தமானது நேரடியாக பேசிக் கொள்ளலாம்.
தமிழ் மக்களை துனபுறுத்துவது போராட்டம் நடத்த வந்தவர்கள் பொதுமக்கள் பொதுமக்களை கூட விரட்டியடித்து நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட நால்வரை முள்வேலிக்குள் அடைத்து வைத்து உணவு மருந்தும் கொடுக்காது வைத்திருந்தார்கள் .
பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அது சீராகியது. இங்கு எதுவுமே தேவையில்லை இது சாதாரண இடம் இதற்கு போய் இவ்வளவு இராணுவம் பொலிஸ் பாதுகாப்பு ஏன் என்று தெரியவில்லை. இங்கு என்ன இருக்கின்றது? என்று இவ்வளவு அடாவடி செய்கின்றார்களோ தெரியவில்லை .
அவர்களுடைய எண்ணங்களை பாருங்கள் இன்னமும் நாங்கள் பயங்கரவாதிகள் தான் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு இருக்கின்றது. தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான பார்க்கபோகின்றார்களா? தொடர்ச்சியாக இவ்வாறு தமிழ் மக்களை புண்படுத்த போகின்றார்களா? நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனையும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இதனை புரிந்துகொள்வாரா?
இங்க வீதியில தான் படுத்துறங்குகின்றார்கள். ஆக தமிழ் மக்களிற்கு எதுவித தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை அங்கே சுதந்திர தினித்திற்கு முன் செய்து முடிக்கபோகின்றேன் என்றார். முடிந்ததா? இல்லை எங்களை துன்புறுத்தும் சம்பவமே தையிட்டியில் தொடர்கிறது.
இங்கு யாருமே இல்லை பல இடங்களில் இதோ இனி சுண்ணாகத்திலும், கந்தோரடையின் தெற்கு பக்கமாக தொடரபோகின்றார்கள் இப்படியான ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நிறைவேற்றி கொண்டுதான் போகின்றார்கள்.
தமிழர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கின்றது. இது மீண்டும் நாங்கள் சாத்வீகத்தினூடாக எதையும் பெறமுடியாது என்பதனை சிங்கள பெரும்பாண்மை தையிட்டி சம்பவத்தினூடாக புலப்படுத்துகின்றது” என்று குறிப்பிட்டார்.
