இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியே குறித்த கஜுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
