காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் நேற்று (04) கண்டி – பல்லேகல பொலிஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
