“தையிட்டியில் இராணுவத்தினரின் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்மாட்டோம் என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தையிட்டிப்பகுதியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக்கோரியும், காணிகளை விடுவிக்க கோரியும் மக்கள் பிரதிநிதிகளாலும், மக்களாலும் மூன்று நாட்களாக போராட்டம் மேற்க்கொண்டிருந்தமை தொடர்பில் அவரிடம் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இனவாத, மதவாத கண்ணோட்டதுடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இந்த விகாரை சட்டவிரோதமானது அல்ல. அமைக்கப்பட்ட இந்த விகாரை எந்தக் காரணத்துக்காகவும் அகற்றப்படாது.” – என்றார்.
