வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் திருமதி சார்ளஸை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்தில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பிய கையோடு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அந்தவகையில் முன்னாள் எம்.பிக்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நவீன் திசாநாயக்க, பாலித ரங்கே பண்டார ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
