மே -18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (09) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை ஆலடிச்சந்தியில் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் மருதனார்மடம் சந்தியில் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
