சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் நாளை (11) இலங்கைக்கு விஜயம் மேற்க்கொண்டு எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்க்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதி கடன் தொடர்பிலான முதலாவது மீளாய்வு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், பிரதிநிதிகள் வழமையான கலந்தாலோசனைகளுக்காக இவ்வாறு இலங்கை விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
