வல்வெட்டித்துறையில் கடந்த வாரமளவில் இடம்பெற்ற இந்திரவிழா வடக்கு – கிழக்கு தமிழர்களைக் கடந்து முழுநாட்டையும் பிரமிக்க வைத்ததுடன், உலக தமிழர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது.
வல்வெட்டித்துறையே விழாக்கோலமாகி அன்றைய இரவுப்பபொழுதை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பெருவிருந்தாக்கி இருந்தமை சிறப்பம்சமாகும்.
பல கோடி ரூபாக்கள் செலவழிக்கப்பட்டாலும் இந்திரவிழா நிகழ்விற்கான ஒழுங்கமைப்பானது நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு பிரமாண்டமாக அமைந்து இருந்தது.
இந்நிகழ்விற்கான ஒழுங்கமைப்பானது இன்ஜினியர் மூளைய விடவும் மோலோங்கி இருந்தாக பல மக்கள் புழாங்கிதத்துடன் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறை வீதிகள் எங்கும், இரவை பகலாக்கி வண்ணமயமாக காட்சியளித்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னணி ஒலி அமைப்பாளர்களின் கைகளின் திறமைகள் இந்திரவிழாவில் சுடர்விட்டு எரிந்து மோலோங்கியது.
இந்திரவிழாவிலேயே மிகவும் சிறப்பானதாகவும், பல மக்களின் மனங்களை வென்ற காட்சியாகவும் கடவுள்களை மின்னமைப்பினால் உருவாக்கி மக்கள் முன் கொண்டுவந்தமை இலங்கையிலேயே சாதனை தடத்தை பதிவு செய்துள்ளது.
ஆஞ்சநேயர் உருவம் பதிக்கப்பட்ட பதாதை 70 அடி உயரமாகவும், மாயவர் உருவம் பதிக்கப்பட்ட பதாதை 28 அடி உயரமாகவும், ஸ்ரீ முத்துமாரியம்மன் உருவம் பதிக்கப்பட்ட பதாதை 46 அடி அகலம் உடையதாகவும், கிருஷ்ணர் ராதை 34 அடி உயரமாகவும் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் மனதை பரவசமாக்கியது.
எத்தனை கலைமேடைகள் அமைக்கப்பட்டு இசைக்குழுக்கள், நடனங்கள், பல்வேறுபட்ட நிகழ்வுகள் என ஒழுங்கமைக்கப்பட்டு அத்தனை நிகழ்வுகளும் குழம்பியடிக்கப்படாமல் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டமை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
கடலுக்குள் மேடை அமைத்து இசைநிகழ்வை நடத்தி மக்களை மகிழ்விக்க வைக்கவேண்டும் என்ற ஏற்பாட்டுக்குழுவின் சிந்தனையை யாராலும் மெய்ச்ச முடியாது.
பத்துக்கு மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும், ஒரு மேடையில் நடக்கும் நிகழ்வின் சத்தம் மற்றைய மேடையில் நடக்கும் நிகழ்வினை குழப்பாத வண்ணம் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டமை மிகச்சிறப்பானதாகும்.
யாழ்ப்பாணத்தில் தற்காலத்தில் ஒரு இசைக்குழுவை நடத்தி முடிப்பது என்பதே கடினமாக இருக்கின்ற நிலையில், பல நிகழ்வுகளை ஒன்றாக நடத்தி பல்லாயிரக்கணக்கான வேறுபட்ட இரசிகர்கள் ஒன்றுபட்டு திரண்டு இருந்தாலும் எவ்வித சச்சரவுகள் இன்றி நிறைவுற்றமை வல்வெட்டித்துறை மண்ணின் சிறப்பை உலகிற்கு பறைசாற்றுகின்றது.
உண்மையில் எத்தனை நிகழ்வுகளை கண்டு களித்திருப்பீர்கள். இந்திரவிழாவை குடும்பத்தோடு பார்த்து மகிழ்வையும் , சிந்தனை திறனையும் வளர்த்துகொள்வது சாலச்சிறந்து.
எனவே, யாழ்.மண்ணில் இருந்து இந்திரவிழாவைப் பார்க்காமல் இருப்பது வாழ்வில் பலதை இழந்தமைக்கு சமனாகும். இதுவரை காலமும் இந்திரவிழாவை பார்க்காதவர்கள் இருந்தால் நிச்சமயாக அடுத்தவருடம் இந்திரவிழாவை கண்டுகளிக்கதவறாதீர்கள்.
உண்மையில், இந்திரவிழாவிற்கான ஒழுங்கமைப்பாளர்களை பராட்டாமல் இருக்கமுடியாது. நிச்சமயாக இந்திரவிழாவிற்கு நிகர் இந்திரவிழாவாகத் தான் இருக்க முடியும்.
