போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் கணனி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை முகநூலில் ஆபாசமாக பதிவிடும் நபர்கள் மற்றும் முகநூல் பக்க அட்மின்கள் என்போர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் போலி முகநூல் கணக்குகள் மூலம் பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை ஆபாசமாக பதிவிடுவது, தனிபரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பது தொடர்பான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு போலி முகநூல் கணக்குகளின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பி.ஐ.வீ கயசிறி தெரிவித்துள்ளார்.
