லண்டனில் ஆப்கான் அகதியொருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் கடந்த 2021 ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி மேற்கு லண்டனில் சவுத்ஹாலில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அகதியான 16 வயது ரிஷ்மீத் சிங் என்பவர் பூங்காவில் நண்பர்களுடன் இருந்த போது குறித்த இளைஞர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கில் இலங்கைத் தமிழரான 18 வயது வனுஷன் பாலகிருஷ்ணன் மற்றும் இல்யாஸ் சுலைமான் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
