கோப்பாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இளம் குடும்பபெண் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
37 வயதுடைய ஆர்.நியாளினி என்ற 3 பிள்ளைகளின் தாயே நேற்று (11) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு நித்திரைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றுக்காலையில் அவரை வீட்டில் காணவில்லை. இந்நிலையில் குடும்பத்தினர் தேடுதல் மேற்க்கொண்டபோது, வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
