கம்பளையில் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயிருந்த 22 வயதுடைய யுவதி இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த பகுதியில் ஆடு மேய்க்கும் இளைஞர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
யுவதியை துஷ்பிரயோகம் செய்ய தான் முயன்றதாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், யுவதியை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாக குறித்த நபர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
