நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தாய் பகுதியில், ஒருவரை மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டு அதை காணொளியாக எடுத்து ரிக்ரொக்கில் பதிவு செய்த ரவுடிக்கும்பல் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் 54 வயதுடைய ஒருவர் நீதிமன்ற வழக்கிற்கு சென்றபோது அவரை இடைமறித்து ரவுடிக்கும்பல் ஒன்று தாக்குதலை மேற்க்கொண்டது.
இத்தாக்குதலில், காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்களை பொலிஸார் தேடிவந்த நிலையில், நேற்று (12) இச்சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தை மேற்க்கொண்ட ரவுடிக்கும்பல் அதை காணொளியாக பதிவு செய்து ரிக்ரொக் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் பத்துநாட்களாக தலைமறைவாக இருந்த ரவுடிக்கும்பலை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
குறித்த தாக்குதலை மேற்க்கொள்ளுமாறு ஜேர்மனியில் இருந்து தமக்கு பணம் அனுப்பபட்டதாக ரவுடிக்கும்பல் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
