வவுனியாவில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்துள்ளது. ஆயினும் பயணித்தவர்கள் எவ்வித காயங்களுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (13) மாலை வவுனியா நகரில் இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மித்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
ஆயினும் அதில் பயணித்த கணவன் , மனைவி , பிள்ளைக்கு எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை. எனினும் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாகியுள்ளது.
