வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ள சோகசம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளது. நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் நாயுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த டனுஜன் (வயது 20) என்ற இளைஞர் பலியாகியுள்ளார்.
