திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தாய்லாந்தில் இருந்து கொண்டுவரும் புத்தர் சிலை வைக்கப்பட உள்ளமையைக் கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (13) மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.
நெல்சன் திரையரங்கத்திற்கு முன்னால் இன்று (13) காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், இந்த மண் எங்களின் சொந்த மண், திருகோணமலை எங்கள் தலை நகரம், அபகரிக்காதே அபகரிக்காதே தமிழர் நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும், எமது கடல் எமக்கு வேண்டும் போன்ற கோசங்கள் முழங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணிகளான காண்டீபன், சுகாஷ் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டம் நாளை காலை வரை இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
