வவுனியாவில் இளம் குடும்பபெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் , கொலையாளியும் தன்னைத்தானே சுட்டு உயிர் மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (13) வவுனியா – பறயனாலங்குளம் – நிலிய மோட்டையில் உள்ள வீட்டில் வைத்து குறித்த பெண் இன்று அதிகாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. குறித்த பெண்ணுடன், குறித்த பெண் திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
சம்வவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
