“எனது ஆட்சியை சதியூடாக கவிழ்க்க முயற்சி செய்தால் அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். அந்த முயற்சியை முழுமையாகத் தோற்கடிப்பேன்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சதி முயற்சி தொடர்பான உளவுத் தகவல்களையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு பதிலளித்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. உளவுத் தகவல்களுக்கு அமைவாக அவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சதி நடவடிக்கை ஊடாக ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் அது நிச்சயமாகத் தோல்வியில் தான் முடியும். என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
