முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரம் தமிழர் பகுதிகள் எங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில், இலங்கை தமிழரசு கட்சி இளைஞர் அணி மற்றும் சில பொதுமக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (15) காலை 10.00 மணியளவில் உரும்பிராயில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு உரும்பிராய் சந்தைப் பகுதியில் இடம்பெற்றது. முன்னாள் வடமாகண சபை உறுப்பினர்களான சுகிர்தன், பரஞ்சோதி மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.



