நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி கட்டமைப்பை திருத்த வேலைகளுக்காக 100 நாட்களுக்கு செயலிழக்கச் செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் 100 நாட்களுக்கு இந்த கட்டமைப்பு செயலிழக்க செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த காலப்பகுதியில் நாட்டில் மின் தடையை ஏற்படுத்தாது இருப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
