நாட்டின் மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு – கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று (15) முதல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை நியமிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
