யாழ்.பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கு இன்று (16) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கை தொடர பொலிசாருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது.
