யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் இன்று (16) காலை சிறுமியை ஒருவரை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கடத்தல்காரன் எனத்தெரிவித்து கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இன்று காலை குறித்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை பார்த்துக் கொண்டிருந்த குறித்த நபரை அப்பகுதி மக்கள் விசாரித்த போது அவர் மாறுபட்ட பதில்களைத் தெரிவித்தமையால் அவர் கடத்தல் காரன் எனத் தெரிவித்து அப்பகுதி மக்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த நபரை விசாரணை மேற்க்கொண்ட பொலிஸார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்தனர்.
குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதைக்கூட அறியமுடியாமல் கொடூரமாக தாக்குதல் மேற்க்கொண்டவர்கள் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்படுவதுடன், தாக்குதல் மேற்க்கொண்டவர்களை கைது செய்யுமாறு அவருடைய உறவினர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
