முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14வது ஞிவருட நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாளை கொழும்பிலும் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
கொழும்பு – பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை காலை 10.30 மணிக்கு இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடமும் காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
