தமிழ்நாட்டில் இருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா வந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
உப்புவெளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு- திருநெல்வேலி 76/A சர்க்கரை விநாயகர் வீதியில் வசித்து வரும் 26 வயதுடைய கஸ்தூரி ரங்கன் ஜெயசூர்ய என்பவரே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை- அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நண்பர்களுடன் நேற்று (16) நீராடிய போது நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
இன்று (17) காலை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
