யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இன்று (17) யாழ்ப்பாண பொலிஸரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
