யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் தலைவருமான ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்சிக் கூட்டத்தில் ஒருவரை தாக்கியே குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்ளப்பட்டுள்ளார்.
வாக்கு மூலம் பெறுவதற்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
