முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தேசமெங்கும் இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் திருகோணமலை நகரில் நினைவேந்தல் நிகழ்விற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.சமன் கே.பியரன்ன தாக்கல் செய்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றத்தால் மேற்குறித்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் உட்பட 10 க்கும் மேற்பட்டோருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
