தென்மராட்சியின் வீரர்களுக்கு களம் அமைக்கும் நோக்கில் ஆரம்பமாகும் TBBL துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின், ஆரம்ப நிகழ்வுகளும், முதல் நாள் போட்டிகளும் இன்று (20) பிரமாண்டமாக ஆரம்பமாகின்றது.
மட்டுவில் தெற்கு வளர்மதி விளையாட்டு மைதானத்தில் காலை 8.30 மணியளவில் ஆரம்ப நிகழ்வுகள் TBBL குழுமத் தலைவர் க.அமல்ராஜ் தலைமையில் இடம்பெறுகின்றது.
Chava Strikers, மட்டுவில் பைட்டர்ஸ், Chava Master, Nunavil Rockers, Nunavil Dominators, Kaithady Super fashion , Madduvil Super Gillies, Kaithady forever Winners, Bigfooters, Chava Spartan ஆகிய பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சம்பியன் கிண்ணத்தை தூக்கப்போகும் அணிக்கு ஐந்து லட்சம் பிரமாண்ட பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல சுவாரஸ்யங்களோடு விருந்தளிக்க காத்திருக்கும் TBBL போட்டிகளை கண்டுகழிக்க மட்டுவில் வளர்மதி விளையாட்டு மைதானத்திற்கு விரைந்து வாருங்கள்.
