சட்டவிரோத முறையில் நாட்டுக்கு தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டுவந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தண்டப்பணம் செலுத்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் பெருந்தொகையான தங்கம் மற்றும் 91 தொலைபேசிகளுடன் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி 75 லட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்திய நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார்.
