அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில், பிடியாணை உள்ள நபர் ஒருவர் கசிப்புடன் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதுடைய ஒருவரே 20 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபருக்கு ஏற்கனவே வழக்கு உள்ளதாகவும், அந்த வழக்கு தொடர்பாக மல்லாகம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
