முகமாலைப் பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில், பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
