மோட்டார் சைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற இளைஞன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் 2000 லீற்றர் கசிப்பும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் அம்பாறை – கல்முனைப் பகுதியில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் பெரிய நீலாவணையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதான சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
