சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கைதடி நுணாவில் சனசமூக நிலையத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
சனசமூக நிலையத்தலைவர் கு.சிவகுமார் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 3.00 மணியளவில் திறப்புவிழா நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வி.சு.துரைராசா (உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர்) அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக திருமதி.செல்வராணி ஜெகதீசன் (சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் – தென்மராட்சி), சி.நிசாந்தன் (கிராம அலுவலர்), அ.மதன்ராஜ் ( முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் – சாவகச்சேரி) ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
மேலும், கெளரவ விருந்தினர்களாக ஆ.தங்கவேல் (அதிபர் – வரணி மகா வித்தியாலயம்), திருமதி.சியாமளா கணராஜன்
(அதிபர் – யா/ கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை), வி.சுகுமார் (பணிப்பாளர் – மேக்கன்ரைஸ் பாதுகாப்பு சேவை) ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
