பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வாழ்வினை ஒளிமயமாக்கும் நோக்கில் சமூக ஆர்வலர்களால் வாழ்வாதார வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – கல்லாறு பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு அவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தையல் மிசின் ஒன்றும், கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான இ.ஜனதன் தலைமமையில் பயனாளியிடம் வைபவரீதியாக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், ஓய்வு பெற்ற அதிபர் ச.கிருஷ்ணன், ஆசிரியர்களான ம.பார்த்தீபன், மு.நவநீதன் மற்றும் சமூக செயற்பாட்டளார்களான பரன் (கனடா), ந.நித்தியசீலன் ஆகியோருடன் இன்னும் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இச்செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்கு சாவகச்சேரி – மட்டுவில் தெற்கு வளர்மதிப்குதியைச் சேர்ந்தவர்களும் தற்போது புலம்பெயர் தேசங்களில் வசித்து வருபவர்களுமான அ.விஜயானந்தன் (கனடா) சி.செல்வசங்கர் (கனடா) ந.சிறீகாந்த் (கனடா) க.கஜேந்திரன் (சுவிஸ்) ஆகியோர் நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
